சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை

0
12
சம்பந்தப்பட்டவர்கள்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமை பாரிய பிரச்சினைக்குரியதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமலிருந்தது பாரிய தவறாகும்.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், தலைவர்களும் உரிய முறையில் செயற்பட்டிருக்கவில்லை.

எவ்வாறிருப்பினும், குறித்த தாக்குதல் தொடர்பில் கடந்த மாதம் 4 ஆம் திகதி இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், சம்பவம் தொடர்பான சாட்சி விசாரணைகளின்போது, கடந்த மாதம் 9ஆம் திகதியும் தகவலொன்று கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், கிடைத்த தகவல்களை அடிபடையாகக்கொண்டு அவதானத்துடன் செயற்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.