யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதற்கு இடமளித்தமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.