தொடரூந்துடன் மோதுண்டு விபத்தில் சிக்கிய பேருந்து! படங்கள்

0
25
தொடரூந்துடன்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 19
    Shares

யாழ் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பஸ் விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தி ரயில், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பஸ்ஸில் மோதியுள்ளது.

இதன்போது குறித்த பஸ் மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் விடுக்கும் அவசர வேண்டுகோள் !