விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

0
21
விஜய்யை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.

அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஒரே ஒரு செல்பி புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆகிறது என்றால் அது அநேகமாக இந்த புகைப்படம் ஒன்றாகத்தான் இருக்கும்.

இந்த நிலையில் இன்றும் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர்.

கட்டுக்கடங்க முடியாத வகையில் ரசிகர்கள் கூட்டம் இருந்ததால் போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை
இந்த நிலையில் இன்றும் ரசிகர்களை காண்பதற்காகவே வேனில் ஏறி விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். இன்று விஜய் வெளியே வரும் போது இருட்டிவிட்டதால் அவர் செல்பி புகைப்படம் எடுக்கவில்லை.

இருப்பினும் விஜய் ரசிகர்கள் தங்கள் மொபைல் போனிலிருந்து லைட்டை ஆன் செய்து அந்த லைட்டை விஜய்யை நோக்கி அடித்ததால் அந்த பகுதியே ஒளி வெள்ளமாக காட்சி அளித்தது விஜய் தனது ரசிகர்களிடம் ஏதேனும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் எழுப்பிய ஓசையால் விஜய் எதுவும் பேசாமல் வேனில் இருந்து கீழே இறங்கி விட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று விட்டார்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை தினமும் அவர் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று தெரிகிறது
மக்களின் வாழ்த்துக்களை விண்னைபிளக்கும் கரகோஷங்களை மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் தளபதி…

கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா!

இன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 14.12.2019

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! 1
Tamil News
விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! 2
Tamilnadu News
விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! 3
World Tamil News