கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்
கொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து முழுவதும் 3 வாரங்கள் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து 3 வாரங்களுக்கு முடக்கப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.
உணவு, மருந்து ஆகிய அத்தியவாசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். பொது இடங்களில் இரண்டு பேருக்கு மேல் கூடினால் கடும் தண்டனை வழங்கப்படும்.
இங்கிலாந்து மக்களுக்கு நான் மிக எளிய வழி முறையை தெரிவிப்பது என்னவென்றால் வீடுகளிலேயே இருங்கள் என்பது தான். இதை நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி
கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி
பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா
விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்
இலங்கையில் கொரோனா பாதிப்பாளர்கள் 100 ஆக அதிகரிப்பு
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!
கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு