ஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி!! பிக்பாஸ் ப்ரோமோ இதோ…

0
224
பிக்பாஸ்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 38
    Shares

பிக்பாஸ் சீசன் 3 துவங்கியுள்ள நிலையில், முதல் நாளான இன்று அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று போட்டியாளர்கள் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்கள் என ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் நடன இயக்குனர் சாண்டி தனது இசை திறமையை வெளிக்கொண்டு வரப்போவதாக கூறி சில பாடல்களை பாடுகிறார். இதனை சக போட்டியாளர்களுடன் இசை கலைஞருமான மோகன் வைத்யாவும் பார்க்கிறார்.

அப்போது சாண்டி அவரிடம் இது என்ன ஸ்ருதி என கேட்க, பதிலுக்கு அவர் முதல் நாளே நான் தான் கிடைச்சனா என கேட்க, பாட்டு பாடுகிறேன் என கூறி சாண்டி அலப்பறை செய்வதாய் ப்ரோமோ முடிகிறது.

இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் சிலர் சாண்டி ஓவர் ஆக்டிங் செய்வதாகவும், இன்னும் நிறைய நாள் இருக்கு கொஞ்சம் அடக்கிவாசி எனவும் அவரை திட்டி வருகின்றனர். சீசன் துவங்கிய முதல் நாளே ரசிகர்கள் போட்டியாளர்களை திட்ட துவங்கிவிட்டனர்.

Bigg Boss Tamil

இசை எங்கிருந்து வருது.. 😂 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VijayTV #BiggBossTamil3

Posted by Vijay Television on Monday, 24 June 2019