“பிகில்” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
21
பிகில்
பிகில்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் “பிகில்”.ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விவேக், இந்துஜா என நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான பிகில் படத்தின் ட்ரெய்லர் இந்திய படங்களில் அதிக லைக்குகள் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து படம் U/A சான்றிதழ் பெற்றது.

தீபாவளிக்கு இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் பிகில் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் பெரும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் பிகில் படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ட்விட்டரில் அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் #BigilReleaseDate என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

அதன்படி பிகில் படமானது அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களை தொடர்ந்து தொடர்ந்து 3 வது ஆண்டாக தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க :

48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக

வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளனின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்