ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர்!

0
17
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகை ஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் , டோலிவுட் , என 5 மொழிகளிலும் கலக்கினார் .

இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்களுக்கு தாயானார் .

இந்நிலையில் , கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி மாரடைப்பாடல் இறந்த ஸ்ரீதேவியின் சேலையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை இந்தியா பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க இருக்கிறார்
போனி கபூர் .

ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர்! 1

ரூ. 40,000 ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டு அதில் கிடைக்கும் பணத்தை ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக என போனி கபூர் தெரிவித்துள்ளார்.