நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 2-ம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
எனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி அரசு மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இதனாலேயே தான் மும்பையில் குடியேறிவிட்டதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் வேறு மாநிலத்திற்கு சென்றிருக்க வேண்டியதில்லை என்றும் கூரியிருந்தார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பிறகு மீரா மிதுனிடம் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
அதற்கு நான் அப்படி தான் பேசுவேன் என்று அவர்களோடு மீரா மிதுன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரை மிரட்டியதாக, ஹோட்டல் பணியாளர் அருண் என்பவர் அளித்த புகாரில் மீரா மிதுன் மீது இரண்டு பிரிவுகளில் எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் பாருங்க :
மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா
சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.
மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!
ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு