நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை அடுத்து ரியோ நாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாணா காத்தாடி, செம போத ஆகாத ஆகிய படங்களைத் தொடர்ந்து ரியோவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் பத்ரி வெங்கடேஷ். இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் …
Read More »இமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் – 10 நாள் ஓய்வெடுக்க திட்டம்
தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் 10 நாள் பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் …
Read More »விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் ? வருவாரா ?- எஸ் ஏ சி பதில் !
நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பதிலளித்துள்ளார். நடிகர் விஜய் நடிகர் என்பதைத் தாண்டி இப்போது அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கும் நபராக மாறி வருகிறார். ரஜினியைப் போல ஒவ்வொரு பட ரிலிஸின் போது அரசியல் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் அவர் அரசியல் ஆசையில்தான் இப்படி பேசிவருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. …
Read More »சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக பேட்டியளித்தார். இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த …
Read More »மதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!
ஒரு காலத்தில் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் …
Read More »சீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
மாமல்லபுரம் வரும் சீன அதிபரை சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவை சீன அதிபர் கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் …
Read More »திருமணத்தின் மூலம் விஜய்யின் நெருங்கிய உறவினராகும் அதர்வா!
மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார். அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் …
Read More »நள்ளிரவில் சொகுசு கார் விபத்து… காரில் யாஷிகா இருந்தாரா?
நள்ளிரவில் நடந்த கார் விபத்தின் போது அந்தக் காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாக வெளியான தகவலுக்கு போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் நள்ளிரவில் சொகுசு கார் மோதி உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவர் காயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் சாலையோரத்தில் இருந்த கடை ஒன்றும் சேதமடைந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரில் …
Read More »சிம்பு மீது பிரபல தயாரிப்பு நிறுவனம் புகார்!
நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அதேவேளையில் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மாநாடு படம் …
Read More »ஆளுமைகள் மீது வழக்குப் பதிவு! கமல்ஹாசன் கண்டனம்
பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 ஆளுமைகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் கும்பல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயல்கள் மோடி ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளதாக மணிரத்னம், ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 ஆளுமைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,