விஜய் சேதுபதி திரைப்படத்தில் நடிகை ரித்விகா

0
10
ரித்விகா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

’விஜய் சேதுபதி, சிபிராஜ்…’ – அடுத்தடுத்து படங்களைக் கைப்பற்றும் பிக்பாஸ் ரித்விகா..!

ரித்விகா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

மெட்ராஸ், பிக்பாஸ்- 2 புகழ் நடிகை ரித்விகா தற்போது நடிகர் விஜய் சேதுபதி உடனான ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

மெட்ராஸ் திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா அடுத்ததாக சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திலும் நடித்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது ரித்விகா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்திய ‘சுயசக்தி விருதுகள் – 2019’ நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை ரித்விகா பேசினார்.

தனது அடுத்தடுத்த திரைப்பட வெளியீடுகள் குறித்துப் பேசிய ரித்விகா, “அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன்.

அடுத்ததாக நடிகர் சிபிராஜ் உடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். இதைத்தொடர்ந்து நடிகை அமலாபால் உடன் பெண்கள் நலன் சார்ந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்துள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.