ஜெனீவா அறிக்கைக்கு இணங்கியமை தேசத்துரோக செயற்பாடு – ஜி.எல்.பீரிஸ்

0
39
ஜெனீவா
ஜி.எல்.பீரிஸ்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கைக்கு அரசாங்கம் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இணக்கப்பாடு தெரிவித்துள்ளமையானது தேசதுரோக செயற்பாடாகும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜெனீவா அறிக்கைக்கு இணங்கியமை தேசத்துரோக செயற்பாடு – ஜி.எல்.பீரிஸ் 1

மனித உரிமை பேரவையில் இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடுகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை அரசாங்கம் இரண்டு தரப்பினரூடாக அணுகுகின்றது எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி தலைமையில் ஒரு தரப்பினரும், அரசாங்கத்தின் தரப்பில் பிறிதொரு தரப்பினரும் போட்டித்தன்மையுடன் செயற்படுவதால் எவ்விதமான சாதகமான தீர்மானங்களும் இலங்கைக்கு ஏற்படாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் அடுத்த ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவுள்ள அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை