கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு

0
18
கொரோனா - ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares
கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் முதியோர் இல்லங்களில் இருந்த பராமரிப்பாளர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கொஞ்சமும் மனிதாபம் இன்றி முதியவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்த 12 முதியவர்கள் எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் படுக்கையிலேயே தங்கள் உயிரை விட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த முதியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்