உங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..?

0
43
உங்கள் குடும்ப
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

உங்கள் படுக்கையறை ரகசியங்கள் வரை உங்கள் நண்பர்களுடன் பகிர்கிறீர்கள் எனில் அளவு கடந்து உங்கள் குடும்ப வாழ்க்கையை அதிகம் பகிர்கிறீர்கள் என்று அர்த்தம்.

கணவர் மனைவியாக இருந்தாலும், காதலர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

என்னதான் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சில விஷயங்களைப் பகிர்வது உங்களுக்கு சங்கடம் இல்லை என்றாலும் உங்கள் துணை அதனால் அசௌகரியத்தை , சங்கடத்தை உணரலாம்.

அப்படி சில விஷயங்களை நீங்கள் பகிர்வதால் உங்கள் துணையின் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். அவர் உங்களிடம் கூறும் சில ரகசியங்களை நீங்கள் வெளிப்படையாக அனைவரிடமும் பகிர்வது சங்கடத்தை உருவாக்கலாம்.

அதேபோல் உங்கள் உறவில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், மனக் கசப்புகளை உங்கள் நண்பர்களிடம் பகிர்வதால் அவர்களுக்கு உங்கள் துணை மீது தவறான எண்ணம் உருவாகும். இதனால் உங்கள் துணை மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்களே உடைப்பது போன்றாகிவிடும்.

அதேபோல் நீங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் பகிர்வது அவர்களுக்கே ஒரு கட்டத்தில் வெறுப்பை உண்டாக்கும். அது உங்களுக்கே தெரியாமலும் இருக்கலாம்.

சிலர் தன் அந்தரங்க விஷயங்களையும் நண்பர்களுடன் பகிர்வார்கள். உங்கள் படுக்கையறை ரகசியங்கள் வரை உங்கள் நண்பர்களுடன் பகிர்கிறீர்கள் எனில் அளவு கடந்து உங்கள் குடும்ப வாழ்க்கையை அதிகம் பகிர்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதேபோல் உங்கள் துணையின் பொருளாதார நெருக்கடிகள், சம்பளம், அவர்களின் கடந்த கால ரகசியங்கள், சந்தித்த நெருக்கடிகள், உடலளவிலும் மனதளவிலும் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் போன்ற மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய தனிப்பட்ட விஷயங்களை நண்பர்களுடன் பகிர்வதே மிகவும் தவறு.

எதையெல்லாம் பகிரலாம்..?

ஒருவேளை அவர் உங்களை படுக்கையில் எல்லை மீறி அச்சுறுத்தல்கள் தருகிறார், அடித்தல், கொடுமைபடுத்துதல், உறவில் நிலையற்ற தன்மை, ஏமாற்ற நினைக்கிறார் , நம்பகத்தன்மையற்ற நடவடிக்கைகள், பேச்சு , கடுமையான சந்தேகப் பேர்வழி என்பன போன்ற விஷயங்களை உங்கள் துணை செய்கிறார் எனில் அவற்றை கட்டாயம் உங்கள் நண்பர்கள் , உறவினர்களுடன் பகிரலாம்.

இதையும் பாருங்க :

யாழ் விமான நிலைய திறப்பு விழா 17ம் திகதி

கர்மா என்பது என்ன…?

ஆணவக் கொலை – கழுத்தை நெறித்து மகளைக் கொன்ற பெற்றோர் !

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர்