மக்களவை தேர்தல் எப்போது? முக்கிய அறிவிப்பு

0
9
மக்களவை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது.

அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தல் அறிவிப்போடு காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்தும் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.