நள்ளிரவில் சொகுசு கார் விபத்து… காரில் யாஷிகா இருந்தாரா?

0
25
யாஷிகா
யாஷிகா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

நள்ளிரவில் நடந்த கார் விபத்தின் போது அந்தக் காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாக வெளியான தகவலுக்கு போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் நள்ளிரவில் சொகுசு கார் மோதி உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவர் காயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் சாலையோரத்தில் இருந்த கடை ஒன்றும் சேதமடைந்தது.

கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டவுடன் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் காரில் இருந்த நபர்கள் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து போலீஸ் தரப்பில் நாம் விளக்கம் கேட்ட போது, சம்பவம் நடந்த இடத்திலும், விபத்தை ஏற்படுத்திய காரிலும் யாஷிகா இருக்கவில்லை என்று போலீசார் கூறினர்.

யாஷிகா அங்கிருந்ததாக கூறப்படுவது வெறும் வதந்தி என்றும் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

சிம்பு மீது பிரபல தயாரிப்பு நிறுவனம் புகார்!