நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அதிமுக எம்.பி.க்கள்

0
10
நாடாளுமன்ற
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுக்களை நியமித்துள்ளது.

நீர்வளத்துறைக்கு மக்களவை உறுப்பினர்கள் 21பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10பேர் அடங்கிய நிலைக்குழுவை அமைத்துள்ளது.

பாஜகவின் சஞ்சய் ஜெய்ஸ்வால் என்பவரைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.