தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்

0
21
தாய் - தந்தை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24).

இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார்.

அந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார்.

தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார்.

இதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் கோபமடைந்த தினேஷ், முருகையனைத் தாக்கிவிட்டு, தடுக்கவந்த அவரது மனைவியையும் தக்கினார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தினேஷை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த முருகையன் மற்றும் அவரது மனைவி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த முருகையனின் மூத்த மகன், ஆகாஷ்(20) தன் நண்பர்களுடம் சேர்ந்து தினேஷ்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த தினேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவக்ல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிவுசெய்து முருகையன், ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இன்றைய ராசிப்பலன் 09 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை