ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா – எகிறும் எதிர்பார்ப்பு

0
5
ரஜினி
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் பிகில், தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இதனை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் 65வது படத்தை இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

தற்போது அந்த படத்திற்கு “நெற்றிக்கண்” என பெயரிடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்தை சித்தார்த் நடிப்பில் வெளியான “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். க்ரிஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் 1981ல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் “நெற்றிக்கண்” வெளியாகி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நயன்தாராவுக்கும் இந்த படம் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.