சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

0
26
சீமான்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 12
    Shares

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளான இன்று அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமானுடைய 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுரேஷ் காமாட்சி எழுதி இயக்கிய மிக:மிக அவசரம் என்ற திரைப்படத்தில் சீமான் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை பேசுகிறது இந்த படம். அதேபோல விவசாயம் குறித்து எடுக்கப்பட்டுள்ள “தவம் – விவசாயப்புரட்சி” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் சீமான்.

ஆஷிப் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இந்த படத்தை விஜய் ஆனந்த் மற்றும் சூரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடும் கிராமத்தை சேர்ந்த போராளியாக நடித்துள்ளார் சீமான்.

சீமானின் பிறந்தநாளில் அவரது இரு படங்களும் வெளியாகியுள்ளதால் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சீமானின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம் ட்விட்டரில் #HBDSeemanAnna என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் பாருங்க :

சர்வதேச எழுச்சி நட்சத்திரம்! அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது

விரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு!

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!