விரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு!

0
6
சிம்புவின் மாநாடு
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்திய மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார்.

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தார்.

மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

எனினும் திடீர் திருப்பமாக சில வாரங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி – சிம்பு இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

மேலும் படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாக சிம்பு உத்தரவாதம் கொடுத்ததால் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு மாநாடு படத்துக்காக ஐயப்பன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்ட புகைப்படங்களையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

இதையும் பாருங்க :

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மலர்ந்த மலர்கள்