மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

0
13
கச்சத்தீவு
கச்சத்தீவு
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

கச்சத்தீவு அருகே 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது

ராமேஸ்வரம் அருகில் உள்ள கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகில் சென்று மீன்பிடிப்பது வழக்கம்.

அப்போது தவறுதலாக இலங்கை எல்லைக்குள் சென்றுவிடுவது உண்டு.

மேலும் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து வருகிறார்கள்.

சில நேரங்களில் படகுகளை சேதப்படுத்துவதோடு கைதும் செய்கிறார்கள்.

இன்று ஏராளமான மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது இலங்கை கடற்படையினர் இரண்டு படுகுகளை பறிமுதல் செய்ததோடு, 11 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.