ரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன?

0
90
இமயமலை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய முடியாமல் போனதை, நடிகர் எஸ்.வி.சேகர் அவமதித்துள்ளார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் , படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருப்பதால் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கமுடியவில்லை.

இதை தொடர்ந்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், மாலை 6.45 மணிக்கு தான் தனக்கு நடிகர் சங்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட தபால் வாக்கு கிடைத்ததாகவும், ஆதலால் நேர தமதம் காரணமாக தனது வாக்கை பதிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் டிவிட்டர் பதிவை அவமதிக்கும் வகையில் நடிகர் எஸ்.வீ.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் டிவிட்டர் கருத்தை பகிர்ந்து, தனது கருத்தையும் அதில் தெரிவித்திருக்கிறார்.

அந்த டிவிட்டர் பதிவில் எஸ்.வீ.சேகர்,” டியர், ரஜினி சார், நீங்க ஒருத்தர் மட்டும் ஓட்டு போட முடியாம இல்ல, 100 க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களும் ஓட்டு போட முடியாமத் தான் இருக்காங்க.

நடிகர் சங்க தேர்தல் வழிமுறைகள் ஏற்பாடுகளும் சரியில்லாத காரணத்தால் நான் நடிகர் சங்க தேர்த்லை புறக்கணிக்கிறேன்” என்று கூறிய்யுள்ளார்.

இந்த டிவிட்ட்ர் பதிவால், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் எஸ்.வீ.சேகரை படு மோசமாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன? 1