இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.
இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
நிதானமாக விளையாடி ரோஹித் சர்மா 115 ரன்களும், மயங்க் அகர்வால், 84 ரன்களும் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
அப்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்தியா – தென் ஆப்பிரிக்க இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த செனுரான் முத்துசாமி என்ற வீரர், தென் ஆப்பிரிக்கா அணியின் அறிமுக வீரராக களம் இறங்கி உள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முத்துசாமியின் குடும்பத்தினர், சில தலைமுறைகளுக்கு முன்னதாகவே தென் ஆப்பிரிக்காவில் குடியேறியுள்ளனர்.
அங்கு பிறந்து வளர்ந்த செனுரான் முத்துசாமி, கிரிக்கெட் வீரராக இந்தியாவிற்கு எதிராக களம் காண்பது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,