மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்

0
32
மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படத்தில் விஜய் பாடல் ஒன்று பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஜய் நடிக்கும் படம் “பிகில்”.

இதில் மைக்கெல் என்ற கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார் விஜய். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் ஜாக்கி ஷ்ராப், விவேக் முதலியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதற்கு முன்னால் விஷ்ணு, சச்சின், துப்பாக்கி, காதலுக்கு மரியாதை, தலைவா, பைரவா போன்ற படங்களில் மொத்தமாக 32 பாடல்கள் வரை விஜய் பாடியுள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் வரிகளில் விஜய் ஒரு பாட்டு பாடியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து விஜய் பாடுவது இதுவே முதல்முறை.

எனவே இந்த பாடலை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.