வெடிகுண்டு தாக்குதல்…சிதறுண்ட தலை , கால் பாகம் கண்டுபிடிப்பு .. பரபரப்பு தகவல்

0
6
வெடிகுண்டு தாக்குதல்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குலில் வெடித்துச்சிதறிய தலை மற்றும் உட்ல் பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்துடையது என்று மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த 21 ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற தற்கொலைன்குண்டு தாக்குதலில் அயல் வீட்டின் கூரையின் மேலிருந்து எடுக்கப்பட தலை மற்றும் உடலில் இருந்து துண்டான இரண்டு கால்களுடனான பாகங்கள், என தேவலாயத்தின் கூரையில் இருந்து எடுக்கப்பட்டன.

இந்த பாகங்கள் எல்லாம் இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரது சிதறிய உடல்பாகங்கள் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலைவாதியான நாசார்முகமது ஆசாத்(34) என்பவருடையது என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த உடல் பாகத்தை அவரின் தயார் உறுதிசெய்ததை அடுத்து மரபணு சோதனைக்கு அனுப்பட்டது.

பின்னர் அது ஆசாத்தினுடையது என்று உறுதிசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.

இதனைத்தொடர்ந்து அவரது சடலத்தை அரசு செலவில் அடக்கம் செய்யவுள்ளதாகவும் தெரிகிறது.

இன்றைய ராசிப்பலன் 11 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை