குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு

0
12
உயிர்த்த ஞாயிறு
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துள்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் பெரும்பாலான நீதித்துறை சார்ந்தவர்கள் மோசடி தொடர்புடையவர்கள் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டு நீதிதுறையை அவமதிப்புக்குள்ளாக்கினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை அடுத்த மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு