இன்றைய ராசிப்பலன் 18 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை

0
32
இன்றைய ராசிப்பலன்
இன்றைய ராசிப்பலன்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

இன்றைய பஞ்சாங்கம்
18-06-2019, ஆனி 03, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி பிற்பகல் 02.31 வரை பின்பு தேய்பிறை துதியை.
மூலம் நட்சத்திரம் பகல் 11.50 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பகல் 11.50 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும்.
வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம்.

மிதுனம்
இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும்.
உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்
இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.
எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
வராத பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்.

கன்னி
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும்.
மற்றவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும்.
எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது.
வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

துலாம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.
நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கடன் பிரச்சினைகள் குறையும்.
உடல்நிலை சீராகும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும்.
குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும்.

தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.
சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும்.
வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
பொன் பொருள் சேரும்.

மகரம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்
இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும்.
குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும்.
சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.
பழைய பாக்கிகள் வசூலாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீனம்
இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும்.
சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001