மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

0
56
முனியம்மா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பறவை முனியம்மா காலமாகியுள்ளார் என்ற செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை வசதியான ஆடம்பர வாழ்க்கை எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தான்.

ஆனால், குணச்சித்திர நடிகராக நடித்த பல்வேறு நபர்கள் இறுதியில் மிகவும் மோசமான நிலையில் சென்ற கதைகளை நாம் பல கேட்டுள்ளோம் அந்த வகையில் பிரபல நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா அவருக்கும் அதே கதிதான். தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புற பாடகியாகவும் திகழ்ந்து விளங்கியவர் பறவை முனியம்மா.

இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். விக்ரம் நடிப்பில் வெளியான ‘தூள்’ படத்தில் மதுரை வீரன் தானே என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை பறவை முனியம்மா. தூள் படத்திற்கு பின்னர் காதல் சடுகுடு, பூ தேவதையைக் கண்டேன் என்று 25 திரைப்படங்களுக்கு மேல் நடிகையாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் என்ற சமையல் நிகழ்ச்சியையும் நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டே கிராமத்து உணவுகளை சமைத்து இவர் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம் நாட்டுப்புறப் பாடல்களுக்கு மிகவும் பெயர் பெற்ற பறவைமுனியம்மா வெளிநாடுகளில் கூட சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி இருக்கிறார்.

நாட்டுப்புற கலைகளுக்கு மத்தியில் பல்வேறு பாடல்களுக்கு பின்னர்தான் நாட்டுப்புற பாடல்கள் சினிமாவில் கூட வரத் துவங்கியது என்று சொன்னாலும் அதற்கு நிகர் இல்லை. இப்படி தள்ளாத வயதிலும் உழைத்த பறவை முனியம்மா இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு என்ற பாடலில் துவண்டு இருந்தாள் மேலும் அந்தப் பாடலில் ஒரு சில வரிகளையும் பாடி இருந்தார்.
மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா 1
பரவை முனியம்மா. அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. மான் கராத்தே படத்திற்கு பின்னர் பறவை முனியம்மாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் மதுரை பரவையில் தனது மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்தார்.

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த அதே தருணத்தில் பரவை முனியம்மாவுக்கு ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் உடல்நலகுறைவு உடல் நலமும்மோசமானது. இதனால் வீட்டிலேயே முடங்கினார் பரவை முனியம்மா.

இதை அறிந்த மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘பரவை’ முனியம்மாவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ. 6000 ஆயிரம் வட்டியாக வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், அந்த பணமும் அவரது வைத்திய செலவிற்கே சரியாக போனது. பறவை முனியம்மாவில் நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினார்.

அவருக்கு பின்னர் எந்த ஒரு நடிகரும் பறவை முனியம்மாவை நேரில் சென்று சந்திக்கவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் பறவை முனியம்மாவின் நிலையை அறிந்த பட்டதாரி பட நடிகர் அபி சரவணன் நேரில் சென்றுஅ வரை விசாரித்ததோடு சிகிச்சைக்கு கொஞ்சம் பண உதவியும் செய்துள்ளார்.

அபி சரவணன் பறவை முனியம்மாவை சந்தித்த போது 80 படங்களில் நடித்துவிட்டேன் இதுவரை யாரும் வந்து என்ன பாக்கல சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்ன வந்து பார்த்து 30 ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போனாரு அவருக்கு அப்புறம் நீ தான் வந்து இருக்கேஎன்று மகிழ்ச்சி பொங்க கூறியதாக அபி சரவணன் கூறியிருந்தார். ஆனால், அவர் சந்தித்த ஒரு சில நாட்களிலேயே பறவை முனியம்மா இறந்துள்ள செய்திகள் பரவி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை மதியம் ‘பரவை’ முனியம்மா, மூச்சுவிட சிரமப்பட்ட பறவை முனியம்மாவை நடிகர் அபி சரவணன், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளார்.மேலும், அவரது முழு மருத்துவமனை ஏற்றுள்ளது.

பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து அபி சரவணனிடம் நடிகர் சங்கத்தில் இருந்து விசாரித்தும் வந்துள்ளனர். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளாதாவும் கூறப்படுகிறது. தற்போது பறவை முனியம்மாவின் உடல் நலம் தெறி வருகிறததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க :

நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்