விஜய் 64 படத்தின் இயக்குனர் லிஸ்ட்டில் மோகன் ராஜா

0
24
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 15
    Shares

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இயக்குனர் மோகன் ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் இப்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய் 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

விஜய் 63 வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த படமான விஜய் 64 குறித்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

தனது அடுத்த படத்திற்காக விஜய் சூப்பர் குட் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அதை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்படத்தை இயக்க இயக்குனர் மோகன் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் விழா ஒன்றில் கலந்துகொண்ட ராஜா இது குறித்து பேசியிருக்கிறார்.

மோகன் ராஜா ஏற்கனவே விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.