இந்திய அளவில் புதிய உச்சக்கட்ட சாதனை படைத்த பிகில்!

0
52
மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

இந்திய அளவில் புதிய உச்ச கட்ட சாதனை படைத்த பிகில்!

விஜய் நடித்த பிகில் பட டிரெய்லர் யூ-டியூபில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு அக்டோபர் 12ம் தேதி வெளியிட்டது.

பிகில் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த டரெய்லரை யூ-டியூபில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் 2.9 மில்லியன் லைக் செய்துள்ளனர். இதன் மூலம் ஷாருக் கான் நடித்த ஜிரோ பட டிரெய்லர் சாதனையை முறியடித்து இந்தியாவில் அதிகமான லைக்ஸ் பெற்ற திரைப்பட ட்ரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஷாருக் கான், அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரினா கைப் உள்ளிட்டோர் நடித்த ஜிரோ திரைப்பட டிரெய்லர் 1.9 மில்லியன் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை விஜய்யின் பகில் பட ட்ரெய்லர் முறியடித்துள்ளது.

இதையும் பாருங்க :

பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!

பொருளாதாரத்தை அழித்து விடுவோம் – துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்! கமல்ஹாசன்

ரஷ்யா நாட்டின் பற்றிய செய்தி