அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

நாளை (03) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இந்தநிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை நாளைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாளை மறுதினமும் கொள்கை பிரகடனம் தொடர்பான பிரேரணை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …