மோடியை சந்தித்துள்ள ஜனாதிபதி

மோடியை சந்தித்துள்ள ஜனாதிபதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துள்ளார்.

ஐதாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், அமைச்சர்களான மனோகணேசன், ரவுப் ஹக்கீம் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் டெல்லி சென்றிருந்தனர்.

அவர்கள் முன்னதாக நேற்று இரவு பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஜுன் மாதம் 9ம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று அமைச்சர் ரவு.ஃப் ஹக்கீம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …