யாழில்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாலாவிப் பகுதியில் இன்று மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் – கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் காவற்துறையினர் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த சிறிய பாரவூர்தியும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் தம்பலகாமம் 174 கட்டைப் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …