வலியின் சுகங்கள் -02

வலியின் சுகங்கள் -02

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உயிரில் கலந்த வலியின் சுகங்கள்
*************************************

அவளும் பலரால் எதிர்பார்க்கப்பட்ட சாதனை நாயகியாய் தனக்கு நடக்க விருக்கும் சதித் திட்டத்தை அறியாமல்
மகிழ்வுடனே போட்டிக்கு தயாராகின்றாள்.

போட்டி நேரம் அருகில் வந்தமையால் அனைத்து போட்டியாளர்களும் அழைக்கப்பட்டு போட்டி ஆரப்பிக்கப்படுகின்றது .

இலட்சிய நாயகியும் தனது இலக்கில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்துடனே போட்டியில் விரைவாக பயணிக்கின்றாள். இவ்வாறு சில நிமிடங்கள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நாயகி தனது இலக்குக்கான முன்னேற்றத்தை கண்டு மற்றைய வீரங்கனைகளை விட 100மீற்றர் அளவு தனது இலக்கில் முன் செல்கின்றாள்.

இவ்வாறு பலரும் எதிர்பார்ப்புடன் நாயகியின் வெற்றிப் பயணத்தை எதிர்பார்த்து இருக்கையிலே நாயகியும் தனக்கு நடக்க போவது அறியாமல் வேகமாக பயணத்தை தொடர்கிறாள். அவ்வாறே அவள் பயணிக்கையில் அவளுடன் போட்டியில் பங்கு கொண்ட வீராங்கனை ஒருவரின் உறவினாரால் அவளின் மேல் மிளகாய்த்தூள் கரைக்கப்பட்ட நீர் ஊற்றப்படுகின்றது.

அந்த நிலையிலும் அவள் அதன் எறிவுத்தன்மையை தாங்கியவளாய் தனது இலட்சிய முடிவை அடைந்தவுடன் மயக்கமடைகின்றாள். அப்போது அங்கு அனைவரும் நாயகியை சூழ்ந்து அவள் களைப்படைந்து வீழ்ந்துவிட்டாள் என எண்ணி முகத்துக்கு நீர் ஊற்றி மயக்கத்தில் இருந்து எழுப்பி வீட்டிற்கு அழைத்து சென்று விடுகின்றனர்.

அவ்வாறே சிலநேரங்கள் செல்ல நாயகிக்கு உடலில் தாங்க முடியாத அளவு எறிவு ஏற்பட அவள் வேதனையில் வாடுகின்றாள் அப்போது அங்கு போக்குவரத்து வசதி குறைவு என்பதினால் நாயகன் நாயகியை தனது மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அழைத்து செல்கின்றான் இதை பலர் பார்வையிடுகின்றனர்.

வலியின் சுகங்கள் தொடரும் …….

பாரதி மைந்தன்

வலியின் சுகங்கள் -01

About அருள்

Check Also

வலியின் சுகங்கள்

வலியின் சுகங்கள் -01

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!27Sharesஉயிரில் கலந்த வலியின் சுகங்கள் ************************************* அன்பு கொண்ட அழகான சிறு குடும்பத்திலே ஐந்து பிள்ளைகளில் முதலாவது …