முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய தினத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படுகிறது.
இன்றைய 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்கு குழு தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்தவர்களுள் சிலர் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, மே18 பிரகடனம் வாசிக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைதியான முறையில் அனுட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இதேநேரம், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இராணுவ வெற்றியின் 10 ஆண்டு நிறைவு நினைவு தினமும் இன்றாகும்.