கடந்த சில வாரங்களை விட, நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 19 ஆம் வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் அதிகளவான போராளிகள் கலந்துகொண்டனர்.
கடந்தவாரத்தில் 14,500 பேர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அதேவேளை, இந்தவாரம் 40,500 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
இது கணிசமாக அதிகரிப்பாகும். பரிசில் நேற்று 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இருந்தபோதும் குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
மஞ்சள் மேலங்கி போராளிகள், தாம் 127,212 பேர் கலந்துகொண்டிருததாக அறிவித்திருந்தனர்.
காவல்துறையினர், ஜோந்தாமினர், இராணுவத்தினர் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், வன்முறைகள் மிக மிக குறைந்த அளவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.