இன்றைய பஞ்சாங்கம்
01-04-2019, பங்குனி 18, திங்கட்கிழமை, நாள் முழுவதும் துவாதசி திதி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு சதயம்.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்-
மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும்.
சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.
தொழிலில் மந்த நிலை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும்.
நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும்.
பிள்ளைகளால் பெருமை சேரும்.
சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம்.
வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும்.
செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும்.
பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும்.
திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.
வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.
பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கன்னி
இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள்.
வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும்.
உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.
வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம்.
குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம்.
உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.
தனுசு
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.
புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம்
இன்று குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.
செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும்.
நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
தொழிலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001