பரிஸ் நோத்ர-தாம் தேவாலயத்தில் பற்றிக்கொண்ட தீ பெரும் பலத்துடன் பரவுவதைத் தடுக்க முடியவில்லை எனவும்,
தேவாலயத்தைக் காப்பாற்றுவது முடியாத காரியமாக உள்ளது எனவும், பரிசின் தீயணைப்புப் படையின் தளபதி ஜெனரல் Jean-Claude Gallet தெரிவித்துள்ளார்.’
அத்துடன் ‘தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது’ எனப் பிரான்சின் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) பிரகடணப்படுத்தி உள்ளார்.
அத்துடன் இந்த முயற்சியிலும், விபத்திலும் யாரும் காயமடையவில்லை எனவும், இவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
400 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டும், தீ அவர்களை வெற்றி கண்டுள்ளது.