தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherForecast #IMD
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உள்கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம்.
தென் தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது. #WeatherForecast #IMD