ஜூலி
ஜூலி

ஜூலி வெளியிட்ட அந்த போட்டோ: விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜூலி ஓட்டு போட்டுவிட்டு தன் கடமையை நிறைவேற்றியதாக வெளியிட்ட போட்டோவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி அத்தனை பெயரையும் கெடுத்துக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள் உருவானார்கள் . இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் , சமூகவலைதளத்தில் ஜூலியை கிண்டலடிக்கவே ஒரு குரூப் இருக்கும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என அடுத்தடுத்து தனது கேரியரில் முன்னேறிக்கொண்டே செல்கிறார் ஜூலி.

இந்நிலையில் ஜூலி மக்களவை தேர்தலில் வாக்களித்துவிட்டு தன் கடமையை நிறைவேற்றியதாக டிவிட்டரில் போட்டோவை வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல் அவரை திட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இவன்களையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள் ஜூலி என அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …