நேற்று இரவு முதல் இன்று காலைவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது தம்புள்ள பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பலபிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நாடமாடி இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் மேற்கொண்டு விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்