ரஞ்சித்
மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்களாயின் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான வெடிப்பொருட்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

அத்துடன் அந்த வெடிப்பொருட்களை கொண்டு வருவதற்காக அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்க பெற்றிருக்குமாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …