பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியினை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அடுத்த வாரம் நடைப்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையின் போது, இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.