ஓவியா

90 ml எதிரொலி: ஓவியாவை கைது செய்ய வேண்டும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்துவிட்டு அதை பெஃமினிசம் என்று சொல்லும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று கூறி பிரபல அரசியல் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்து கடந்த 1ம் தேதி வெளியான படம் ’90 எம்.எல்’. படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகிவருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம், இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், நடிகை ஓவியா நடித்துள்ள ’90 எம்.எல்.’ படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …