LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தாக்குதல் சமபவம் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு அதற்கு முன்னரே கிடைத்திருந்ததா என்றும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள் போதியளவில் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பது குறித்தம் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த தாக்குதல்களின் பாதிப்புக்களைத் தடுக்க முடியாமல்போனமைக்கு காரணமாக அமைந்த அரச பொறிமுறையின் குறைபாடுகள் மற்றும் தாக்குதலுக்கு பங்களிப்புச் செய்த வேறு விடயங்கள் குறித்தும் தகவல் கோரப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாத்திற்கு ஆதரவளித்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது ஆளுநருக்கோ அல்லது தனி நபருக்கோ எதிராகவுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா என்றும்,

எதிர்காலத்தில் அத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பொதுமக்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை ஜுன் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …