பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
வெலிமடை – திமுத்துகமவில் ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 51 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.