உலக ஞாபக மறதி நோய்

உலகம் முழுவதும் ஞாபக மறதி நோயால் 40 லட்சம் பேர் பாதிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உலக ஞாபக மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுவோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றை காலக்கட்டத்தில் உணவு சமைப்பது முதல், சிறு சிறு கூட்டல் கணக்கு போடுவது வரை எல்லாமே இயந்திர வாழ்க்கையாகவிட்டது.

மனிதன், தன் மூளைக்கு வேலை கொடுப்பது 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே என்று சொல்வார்கள்.

மூளைக்கு வேலையே கொடுக்காமல், இயந்திரம் போல் செயல்பட்டு வந்தால் இந்த ஞாபக மறதி நோய் வந்துவிடும் என்கிறார் நரம்பியல்துறை பேராசிரியர் மருத்துவர் வினோத் கண்ணா.

தினமும் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் புதிய விஷயங்களை கற்பது, மூளைக்கு வேலைகொடுத்து பணிகளை செய்வது போன்ற பணிகளை செய்தால் ஞாபக மறதி நோய் வருவதை தடுக்கலாம் என்கிறார் பேராசிரியர் வினோத்கண்ணா.

ஞாபக மறதி நோய் வந்து விட்டால் தூக்கமின்மை, மற்றவர்கள் மீது நம்பிக்கை இழப்பது, அடுத்தவர் மீது சந்தேகமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஞாபக மறதி நோய் படிப்படியாக அதிகரித்து நாளடைவில் மூளையின் செயல்பாடும் குறைந்து மூளையின் அளவு சுறுங்கி உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். நினைவாற்றலை இழந்த மனித வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம்.

இன்றைய ராசிப்பலன் 21 புரட்டாசி 2019 சனிக்கிழமை

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …