தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், வேட்புமனுவில் சில தகவல்களை மறைத்ததாகவும் கூறி, அவர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கனிமொழி வெற்றிக்கு எதிரான மனுவை திரும்பப் பெறுவதாக தமிழிசை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசையின் இந்த மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக உரிய நோட்டிஸை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுவின் மீதான விசாரணை அக்டோபர் 14-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.