பிராய்லர் கோழி

பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அதேபோல லேயர் கோழிகள் பெரும்பாலும் முட்டை களுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன.

முட்டை உற்பத்தி குறைந்ததும் பின்னர் இறைச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழி என இரண்டு வகைகள் உண்டு. சந்தைக்கு வருவதும், நாம் உண்பதும் பிராய்லர் கோழி முட்டைகள் கிடையாது.

அவை அனைத்தும் லேயர் கோழிகளின் முட்டைகளே. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமேதான் வளர்க்கப்படுகின்றது. பிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம்.

இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர். மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது

பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.

பிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்க்கு முக்கிய காரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது.

எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள். தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும்.

இதற்க்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.

பிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.

பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். எனவே இதனை அறவே தவிர்த்திடுங்கள்.

இன்றைய ராசிப்பலன் 04 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை

About அருள்

Check Also

மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள் கொண்ட கோவைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!15Sharesகோவைக்காயின் உவர்ப்பான சிவை வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிலருக்குச் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் …